உலகம்

பாடல்கள் இல்லாத என் தாயகமே! – மனதை உருக்கும் ஆப்கன் பாடகர் (வீடியோ)

Published

on

ஆப்கானிஸ்தானில் 14 வருடங்களாக இருந்த மக்களாட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். எனவே, உயிருக்கு பயந்து பலரும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் பலரும் குவிந்திருப்பதால் அங்கு தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டது. சமீபத்தில் அங்கு குண்டுவெடிப்பும் நடந்து 130க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். எப்போது என்ன நடக்கும் என்கிற பதட்டம் ஆப்கான் வாசிகளிடம் காணப்படுகிறது. ஒருபக்கம் ஆப்கான் பாடல்களை பாடும் பாடகர்களை தலிபான்கள் சுட்டுக் கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கான் நாடு பாடகர் ஷராபத் பர்வானி தனது தாயகம் பற்றி பாடல் பாடும் வீடியோவை நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் ஷரிஃப் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பாடலை அவர் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்.

வேதனையால் சோர்வானாய் என் தாயகமே!..
பாடல்களும் ,மெலடிகளும் இல்லாமல் இருக்கிறாய்…
மருந்தில்லாமல் நீ வலிகளுடன் இருக்கிறாய் என் தாயகமே

என அந்த பாடல் நீள்கிறது..

அமெரிக்காவின் அகதி முகாமில் அவர் சிலருடன் அமர்ந்து கொண்டு இந்த பாடலை பாடியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

இதைப்பார்த்த பலரும், உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version