உலகம்

முன்னாள் துணை அதிபர் சகோதரருக்கு தூக்கு தண்டனை கொடுத்த தாலிபான்கள்!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பதும் அந்நாட்டின் அதிபர் அண்டை நாட்டிற்கு தப்பி ஓடி விட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக பெண்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரின் சகோதரரை தூக்கில் தொங்கவிட்டு தாலிபான்கள் கொலை செய்துள்ளதாக தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ராகுல்லா அஜிஜி என்பவரை தாலிபான்கள் கொடுமைப்படுத்தி தூக்கிலிட்டு கொலை செய்ததாகவும் அவரது உடலை கூட உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டதாகவும் அவரது உடல் அழுகி அப்படியே கிடக்கட்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பஞ்ச்ஷீல் மாகாணத்தையும் கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாகவும் கிளர்ச்சிக்காரர்கள் பலரையும் கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் தாலிபான்களை தட்டிக் கேட்காமல் ஐநா வேடிக்கை பார்த்து வருவதாகவும் உலக நாடுகளும் அமைதி காத்து வருவதாகவும் ஆப்கானிஸ்தான் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version