தமிழ்நாடு

234 தொகுதிகளும் டெபாசிட் இழப்பீங்க..!- அதிமுகவுக்கு சாபம்விட்ட எல்.கே.சுதீஷ்

Published

on

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்கும் என்று தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது தனித்துத் தேர்தலைச் சந்திக்குமா என்று தெரியவில்லை.

இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னர் சுதீஷ், ‘தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்தத் தொண்டர்களின் கருத்துகளை மாவட்டச் செயலாளர்கள், தலைவர் விஜயகாந்த்திடம் தெரிவித்தனர். அதனடிப்படையில், நாங்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும் தொகுதிகளும் கிடைக்காததால், அதிமுக – பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இன்றைக்கு எங்களுக்கு தீபாவளி. 234 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுகவில் பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக கே.பி.முனுசாமி இருக்கிறார். அவர் அதிமுகவுக்குச் செயல்படவில்லை. அவர் பாமகவின் கொள்கை பரப்புச் செயலாளராக அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version