தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.,க்கு தண்டனை கிடைத்ததற்கு காரணம் இதுதானாம்! அமைச்சர் லூஸ் டாக்!!

Published

on

திறமையான வழக்கறிஞர் இல்லாததே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனைப் பெற்றதற்கு காரணம் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து பேசினார். அவர் கூறியதாவது, ‘ஜெயலலிதாவவின் சொத்துக் குவிப்பு வழக்கு என்பது ஒரு சிறிய வழக்கு தான். அதில் ஒன்றுமே இல்லை.

ஆனால், ஏன் ஜெயிலுக்கு அவர் சென்றார் என்று நீங்கள் கேட்கிறீர்கள். நம்மிடம் நல்ல திறமையான வழக்கறிஞர்கள் சிலர் இருந்தனர். ஆனால், அவர்கள் ஜெயலலிதா எப்போதும் தங்களை உதவிக்கு வைத்திருக்க வேண்டும் என்று எண்ணத் தொடங்கி விட்டனர். இந்த வழக்கு போனால் ஜெயலலிதா இனி தங்களை அழைக்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டனர்.

பொதுவாக திமுகவினர் ஏதாவது குறுக்கு வழியில் சென்று நமக்கு குந்தகம் விளைவிக்க முற்பட்டனர். ஆனால், இந்த வழக்கில் நம்ம ஆட்களே, நமது வழக்கறிஞர்களே திறமையாக வாதாடாமல் போய்விட்டனர். இதனாலேயே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது’ இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version