தமிழ்நாடு

பாஜகவை தமிழ்நாட்டிலிருந்து விரட்ட அதிமுகவும் முன்வரணும்: திருமா பகிரங்க அழைப்பு!!

Published

on

அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ‘பாஜகவை விரட்ட அதிமுகவும் முன் வர வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.

அவர் இன்று பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘தேர்தலுக்கு முன்பே நான் குறிப்பிட்டிருந்தேன். அதிமுக பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி. அது ஒவ்வாத கூட்டணி. பாஜகவுடன் கூட்டணி வைக்கும் காரணத்தினால் அதிமுக படுதோல்வி அடையும் என்று நான் தொடர்ந்து சொல்லி வந்தேன். நான் சொன்ன கருத்து தற்போது அதிமுகவுக்குப் புரிய வந்துள்ளது.

அதிமுகவினர் இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும். தங்களின் சுயநலத்துக்காக சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் வேரூன்ற அவர்கள் உதவி செய்து விட்டார்கள். இனிமேலாவது அவர்கள் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டும்.

பாஜகவை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் விரட்டியடிப்பதற்கு அதிமுகவும் முன் வர வேண்டும்’ என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version