தமிழ்நாடு

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடா? என்ன ஆச்சு தேமுதிக?

Published

on

அதிமுகவின் முதலாவது வேட்பாளர் பட்டியல் கடந்த 5ஆம் தேதி வெளியானது என்பதும் இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 6 பேர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தன என்பதும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று அதிமுகவின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய வேட்பாளர் பட்டியலில் தமிழக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதி குறித்த விவரங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் மற்றும் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிக, தமாக, உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதி குறித்த இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறார்களா? அல்லது தொகுதி மாறுகிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version