தமிழ்நாடு

தேமுதிகவுக்கு 15 தொகுதிகள்? இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?

Published

on

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக அந்த கூட்டணியில் நீடிக்குமா? அல்லது தனித்து போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இணையுமா? 3வது அணியில் இணையுமா? என்ற கருத்துக்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அதிமுக குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் தற்போது மீண்டும் அதிமுக-தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சற்று முன் வெளியான தகவலின்படி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை வழங்குவதற்கு அதிமுக முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுமா? ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் தமிழகம் முழுவதும் தொண்டர்களை வைத்திருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் தேமுதிக வெறும் 15 தொகுதிகளுக்கு அதிமுக கூட்டணியில் இணையுமா? அல்லது அதிரடி முடிவு எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில் தேமுதிக இல்லை என்றாலும் தேமுதிக இல்லாமல் கூட்டணியை வழி நடத்த அதிமுக தலைவர்கள் முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version