தமிழ்நாடு

கூட்டணி பேச்சுவார்த்தை முடியும் முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக: பாஜக அதிர்ச்சி!

Published

on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை அதிமுக மற்றும் பாஜக கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை முடியும் முன்னரே திடீரென அதிமுக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பாஜக கேட்ட தொகுதிகளும் இருப்பதால் பாஜக அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் இதனை அடுத்து இன்று பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய ஆலோசனைகள் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக மற்றும் மற்ற கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை முடியும் முன்னரே அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருப்பது அதிமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாவிட்டால் பாஜக தனித்து போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version