தமிழ்நாடு

அதிமுக விருப்பமனு தேதி திடீர் மாற்றம்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், விருப்பமான பெறுதல், நேர்காணல், தேர்தல் பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றை கிட்டதட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை மார்ச் 5ஆம் தேதி வரை தரலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது போதிய அவகாசம் இல்லாததால் அந்த தேதி மார்ச் 3ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் சார்பில் தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் போட்டியிட விரும்பும் விண்ணப்பதாரர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விருப்ப மனுவை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்து இருந்த தேதியிலிருந்து இரண்டு நாட்கள் முன்கூட்டியே விருப்பமனு ஒப்படைக்கும் தேதி முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version