தமிழ்நாடு

மாநிலங்களவை தேர்தலில் ஜெயகுமாருக்கு சீட் இல்லையா? வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

Published

on

ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி வேட்பாளர்பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

திமுக தரப்புக்கு 4 எம்பிக்கள் கிடைக்கும் நிலையில் ஏற்கனவே மூன்று எம்பிக்களின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன என்பதை பார்த்தோம். ஒரு எம்பி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் அக்கட்சி விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுக கிடைத்த இரண்டு எம்பிக்களின் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் தற்போது வேட்பாளர்பட்டியல் ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தரப்பிலிருந்து ஜெயக்குமாருக்கு கண்டிப்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாதது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தது முதல் அவரது ஆதரவாளராக தர்மர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயக்குமாரின் பெயர் இந்த பட்டியலில் இல்லாதது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் வருங்காலத்தில் அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version