தமிழ்நாடு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் சீனிவாசன் ஐடி ரெய்டு: பெரும் பரபரப்பு

Published

on

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிர்க்கட்சியை மட்டுமே குறிப்பாக திமுகவை மட்டுமே குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மகள், மற்றும் திமுக வேட்பாளர்கள் ஒரு சிலரது வீடுகளில் அதிரடியாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது என்பதால் இந்த குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில் அதிரடியாக இன்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே திருத்தங்கல் என்ற பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நெருங்கிய நண்பரான சீனிவாசன் என்பவர் வீட்டில் சற்று முன்னர் வருமான வரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சியினர் வீடுகளிலும் சோதனை செய்யப்படுவதால் வருமான வரித்துறையினர் பாகுபாடு இன்றி தான் சோதனை செய்வதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் அதிக அளவு பணம் புழங்குவதாகவும் வரும் தகவல்களின் அடிப்படையில் மட்டும்தான் அதிகாரிகள் சோதனை செய்து வந்ததாகவும் வரித்துறை அதிகாரிகளை பொருத்தவரை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லை என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version