தமிழ்நாடு

சர்கார் படம் ஓடும் தியேட்டர் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

Published

on

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. படம் வெளியாகும் முன்னரே திருட்டு கதை என சர்ச்சை வெடித்தது. தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளாலும் சர்ச்சை நிலவி வருகிறது.

சர்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்துக்கு கோமளவள்ளி என ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்துள்ளதும், இலவச திட்டங்களை அவதூறாக படத்தில் சித்தரித்துள்ளதும் அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்கம் முன்னர் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரையில் சர்கார் படத்தை திரையிட்டுள்ள தியேட்டரை ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டனர். அவர்கள் சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

seithichurul

Trending

Exit mobile version