தமிழ்நாடு

தங்க தமிழ்ச்செல்வனுக்கு வலை வீசும் அதிமுக: ராஜ்யசபா எம்பி ஆஃபர்!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அதிமுக தரப்பு வலை வீசி வருவதாகவும், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவிய வழங்கி தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவி வருகிறது.

அமமுக பொதுச்செயலாளராக இருக்கும் டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக இருப்பது வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தான். இதில் சில மாதங்களுக்கு முன்னர் தங்கம் திமுக பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால் அதனை மறுத்த தங்க தமிழ்ச்செல்வனை தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு எதிராக களமிறக்கினார் தினகரன்.

ஆனால் தங்க தமிழ்ச்செல்வனால் வெற்றிபெற முடியவில்லை. மேலும் அமமுகவும் இந்த தேர்தலில் எதிர்பார்த்த வாக்குசதவீதத்தை பெறவில்லை. இந்நிலையில் இந்த குழப்பமான சூழ்நிலையில் தங்க தமிழ்ச்செல்வனை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தே தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

அதில், தேனி மாவட்டத்தில் உங்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் நாங்க பார்த்துக்கிறோம். உங்களுக்கு ராஜ்யசபா எம்.பி கூட வழங்க தயாராக இருக்கோம். ஓபிஎஸ் தரப்பால் எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது அதை நாங்க பார்த்துக்குறோம் என தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version