தமிழ்நாடு

சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்..எல்.ஏக்கள் திடீர் தர்ணா!

Published

on

சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென தர்ணா செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தற்போது கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட அனைவரும் திடீர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை வழக்கில் திமுக அரசு பொய் வழக்கு போட்டிருப்பதாக அதிமுக தரப்பினர் குற்றஞ்ச்சாட்டி வருகின்றனர்.

கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் தற்போது கலைவாணர் அரங்கத்தின் வெளியே தரையில் அமர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் தான் நடத்தி வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா காரணமாக சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கில் அரசியல் ரீதியான எந்த தலையீடும் இல்லை என்றும், கொடநாடு கொலை வழக்கில் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் உரிய விசாரணை நடத்தப்பட்டு அந்த வழக்கில் குற்றவாளிகள் யார் என கண்டுபிடித்து அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் விளக்கமளித்தார்.

ஆனால் திமுக அரசு அதிமுக எம்எல்ஏக்கள் மீது கொடகொலை விவகாரத்தில் பொய் வழக்கு போட்டு வருவதாக அதிமுக தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version