தமிழ்நாடு

ஸ்டாலினை நம்பி பிரயோஜனம் இல்லை: அண்டர் கிரவுண்ட் ஆப்ரேஷனில் இறங்கிய தினகரன்!

Published

on

நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் தேர்தல் நடந்த 22 தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளையும், திமுக 13 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதிமுக குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றிபெற்றால் தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற சூழலில் சரியாக இந்த 9 தொகுதி வெற்றியை பெற்றது.

இதனால் சட்டப்பூர்வமாக அதிமுக ஆட்சி நீடிக்க எந்த தடையும் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் நூலிழையில் ஆட்சி நீடிப்பதால் அரசியலில் பதற்றம் நிலவி வந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்து இந்த ஆட்சியை திமுக கவிழ்க்கும் என்ற செய்தி சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசியல் வட்டாரத்தில் அரசல்புரசலாக பேசப்பட்டது.

சில திமுக மாவட்டச்செயலாளர்களும் இதற்கான பணிகளில் இறங்கினார்கள். ஆனால் திமுக தலைமை மு.க.ஸ்டாலினின் சில தயக்கத்தினால் இந்த ஆட்சி கவிழ்ப்பு ஆப்ரேஷன் வேகமெடுக்காமல் இருக்கிறது. இதனால் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்ப்பார் என்ற நம்பிக்கை அரசியல் வட்டாரத்தில் குறைந்தவிட்டது.

எனவே ஸ்டாலினை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது களத்தில் இறங்கியுள்ளதாக சில தகவல்கள் வந்துள்ளன. புதுச்சேரியில் தனது பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்த தினகரன் சில முக்கிய அமமுக நிர்வாகிகளை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார். மேலும் புதுச்சேரியில் சில அதிமுக எம்எல்ஏக்கள் தினகரனை ரகசியமாக சந்தித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் அதற்கான அண்டர் கிரவுண்ட் ஆப்ரேஷனில் இறங்கியுள்ளதன் வெளிப்பாடே அந்த அதிமுக எம்எல்ஏக்களின் ரகசிய சந்திப்பு.

seithichurul

Trending

Exit mobile version