தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: அரசியலில் இருந்தே விலகிய அதிமுக எம்.எல்.ஏ!

Published

on

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அரசியலில் இருந்து அதிமுக பெண் எம்எல்ஏ ஒருவர் விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் நேரத்தில் கட்சியினர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதும் ஒரு சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் இதனால் அவர்கள் கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சிக்கு செல்வதுமான நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கின்றன.

இந்த தேர்தலில் கூட போட்டியிட வாய்ப்பு கிடைக்காத ஒரு சிலர் மாற்றுக் கட்சிக்கு சென்று தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் சுயேச்சையாக போட்டியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பண்ருட்டி தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக பண்ருட்டியில் சொரத்தூர் ராஜேந்திரன் என்பவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து அதிருப்தி அடைந்த சத்யா, தானும் தனது கணவரும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version