தமிழ்நாடு
அதிமுக தோல்வியடைந்தால் விஜயபாஸ்கர் தான் பொறுப்பு: அதிமுக எம்.எல்.ஏ அதிரடி பேட்டி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்தால் அதற்கு முழுப்பொறுப்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என அதிமுக எம்எல்ஏ ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியான போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளின் வேட்பாளர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பரிந்துரையால் வேட்பாளர்களாக ஆனவர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வதந்தியாக பரவி வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் பொறுப்பு என அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேட்பாளர் பட்டியல் வெளியானதும் ஒரு சில மாவட்டங்களில் இருந்ததுபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அதிருப்திகள் இருந்தது என்பதும் ஒரு சில வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என அதிமுகவினர் போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதியின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.