தமிழ்நாடு

அமமுகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ? சீட் கொடுக்காததால் அதிரடி முடிவு!

Published

on

நேற்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற காரணத்தினால் அதிமுக எம்எல்ஏ ஒருவர் கட்சியிலிருந்து விலகி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் ராஜவர்மன், தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வேண்டும் என விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அதே மாவட்டத்தில் அமைச்சராக இருக்கும் ராஜேந்திரபாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து ராஜவர்மனுக்கு சீட் கிடைக்காமல் ராஜேந்திரபாலாஜி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதி கொடுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தான் தனக்கு சீட் கிடைக்காமல் செய்துவிட்டார் என்றும் உண்மையான தொண்டர்களுக்கு அதிமுகவில் இவ்வளவுதான் மரியாதையா என்றும் அவர் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் சற்று முன்னர் ராஜவர்மன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொண்டார். அவருக்கு அமமுக சார்பில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை மீண்டும் சந்தித்த ராஜவர்மன் ’சசிகலா ஒருவரால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும்’ என்று தெரிவித்தார்.

 

 

Trending

Exit mobile version