தமிழ்நாடு

அதிமுக ஒரு கட்சியே கிடையாது; 33 பேர் நடத்தக்கூடிய டெண்டர் கம்பெனி: தினகரன் அதிரடி!

Published

on

நேற்று நகப்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்த்தார். அப்போது அவர் அதிமுகவை 33 பேர் நடத்தும் டெண்டர் கம்பெனி என விளாசித்தள்ளினார்.

நேற்று முன்தினம் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்திய அதிமுக திமுகவை கடுமையாக விமர்சித்தது. அப்போது சேலத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் குடும்ப அரசியலை விமர்சித்தார். மேலும் திமுக ஒரு கட்சியே இல்லை எனவும் அது ஒரு கம்பெனி எனவும் கூறினார்.

இந்நிலையில் செய்தியாளரை சந்தித்த தினகரனிடம் இடைத்தேர்தலுக்குப் பிறகு மாற்றம் வருமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தினகரன், ஆளும்கட்சியினர் இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என்று டெல்லியிடம் கோரிக்கை விடுத்துவருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்றால் யாருடையது பெரிய கட்சி என்பது தெரிந்துவிடும் என்றார். மேலும் அதிமுக ஒரு கட்சியே கிடையாது. 33 பேர் நடத்தக்கூடிய டெண்டர் கம்பெனி என அவர்களது பாணியிலேயே விமர்சித்தார்.

seithichurul

Trending

Exit mobile version