தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு வழக்கு: சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published

on

அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஒபிஎஸ் தரப்பினர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் வாதத்தின் போது குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் இயற்றப்பட கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

ஆனால் பொதுக்குழுவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் எதற்கும் உத்தரவாதம் தர முடியாது என்றும் ஈபிஎஸ் தரப்பில் இருந்து வாதம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று மாலை தீர்ப்பை ஒத்தி வைக்கப் போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் சற்று முன் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த எந்தவித தடையும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. எனவே நாளை திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் கலந்து கொள்வார்களா? ஈபிஎஸ் தரப்பு ஒற்றை தலைமையை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version