தமிழ்நாடு

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி கைது!

Published

on

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இந்த தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்றும் இந்த தேர்தலின் பாதுகாப்பிற்கு தமிழக போலீசாருக்கு பதிலாக மத்தியிலிருந்து துணை ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து எஸ் பி வேலுமணி இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலரும் கலந்துகொண்டனர் .

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ் பி வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் எஸ் பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

இதுகுறித்து எஸ் பி வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவுக்கு ஆதரவாக காவல்துறையினரே பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் காவல்துறையினரே விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க உதவியாக இருப்பதாகவும், குண்டர்கள் மற்றும் ரவுடிகளை சிறையிலிருந்து விடுதலை செய்து கோவையில் இறக்கி உள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version