தமிழ்நாடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பார் தேர்தல் முடிவு அறிவிப்பு!

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்தலுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்து இருந்தது.

மேலும் இந்த தேர்தல் அதிகாரியாக பொன்னையன் செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மேலும் ஒரு சிலர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போதும் அவர்களை அதிமுக தொண்டர்கள் விரட்டி அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பொன்னையன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஓ பன்னீர் செல்வம் அவர்கள் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version