தமிழ்நாடு

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – ஹைலைட்ஸ் என்ன?

Published

on

சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வரான எடப்பாடி பழனிசாமி இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 

அதிமுக தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்:

  • அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்

 

  • வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்

 

  • இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில்தொடங்க நிதியுதவித் திட்டம்

 

  • மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்த்தப்படும் 

 

  • மதுபானக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்

 

  • அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐ.டி.பார்க்

 

  • மதுரை விமான நிலையத்திற்கு பச்ம்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பெயர்

 

  • கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி

 

  • அனைவருக்கும் இலவச சூரிய சக்தி மின் அடுப்பு

 

  • இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்

 

  • ரேசன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும்

 

  • அனைத்து மாணவர்களுக்கும் 2 ஜிபி டேட்டா

 

  • கல்விக் கடன் ரத்து

 

  • வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி

 

  • அனைவருக்கும் அம்மா வாஷிங்மெஷின் திட்டம்

 

  • அம்மா இல்லம் திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு

 

  • ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை இலவசமாக அரசே வழங்கும்

Trending

Exit mobile version