Connect with us

இந்தியா

சந்தேகத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் செயல்பாடு: மசோதாக்களை நிறைவேற்ற மறைமுகமாக உதவுகிறதா?

Published

on

மருத்துவக் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மாநிலங்களவையில் எதிராக பேசிய அதிமுக எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை பொறுத்தவரை மக்களவையில் மசோதாக்களை எளிதாக நிறைவேற்றி விடுகின்றன. ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் சற்று சிரமப்படுகின்றன. ஆனால் இந்த சிரமத்தை அதிமுக உதவியுடன் கடந்து சென்றுவிடுகிறது பாஜக. முன்னதாக முத்தலாக் விவகாரத்தில் மக்களவையில் அதனை ஆதரித்து வாக்களித்த அதிமுக தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதும் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக பேசியது.

எதிராக பேசிய அதிமுக வாக்கெடுப்பின் போது மசோதாவுக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. இதனால் மசோதாவுக்கு எதிரான ஓட்டுகள் குறைகிறது. மசோதாவும் எளிதில் நிறைவேற்றப்படுகிறது. இதனை திமுக எம்பி கனிமொழி ஏற்கனவே விமர்சித்திருந்த நிலையில் மீண்டும் அதே யுக்தியை பயன்படுத்தி மேலும் ஒரு மசோதா நிறைவேற உதவியுள்ளது அதிமுக.

தேசிய மருத்துவ ஆணைய மசோதா கடந்த ஜூலை 29-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இம்மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் பேசும்போது, நீட் தேர்வை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும். தற்போதைய தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நெக்ஸ்ட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் மசோதா மீது பதிலளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகள் குறித்து பதிலேதும் அளிக்கவில்லை. இதனையடுத்து வாக்கெடுப்பு நடைபெற இருந்த நேரத்தில், நீட் தேர்வு குறித்து மத்திய அரசு உறுதிமொழியளிக்காததைச் சுட்டிக்காட்டி மாநிலங்களவையிலிருந்து அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தானே. ஏன் வெளிநடப்பு செய்து மருத்துவ ஆணைய மசோதாவையும் எளிதில் நிறைவேற்ற உதவி செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது எதிர்ப்பது போல எதிர்த்து மசோதாவை ஆதரிக்கும் அனுகுமுறைதான். மக்களை ஏமாற்றுவதற்காகவே இப்படி எதிர்த்து பேசிவிட்டு வெளிநடப்பு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாமல் இருந்திருக்கும்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!