தமிழ்நாடு

ஜூலை 9ல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனையா?

Published

on

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தோல்வி அடைந்து எதிர்கட்சி வரிசையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியை இழந்ததில் இருந்தே அதிமுகவில் உள்கட்சி பிரச்சனைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் போர் நடந்து வருகிறது என்பதும், சசிகலாவின் ஆடியோக்கள் தினந்தோறும் வெளியாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 9-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் அதனால் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதை அடுத்து அது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் சசிகலா ஆடியோ விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சசிகலாவின் ஆடியோ தினந்தோறும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சசிகலா பக்கம் சென்று விடுவார்களோ என்ற அச்சம் ஒவ்வொரு அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version