தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து முன்னாள் மக்களவை எம்பி நீக்கம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடி!

Published

on

அதிமுகவிலிருந்து முன்னாள் மக்களவை எம்பியும் முன்னாள் அமைச்சருமான முக்கிய பிரமுகர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உள்ள தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பாக முன்னாள் எம்பியும் முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா கட்சிக்கு எதிராக ஒரு சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து தலைமையின் முடிவுக்கு மாறாக கருத்துக்களை தெரிவித்து கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுகவின் முன்னாள் எம்பி மற்றும் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அன்வர்ராஜா விரைவில் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version