தமிழ்நாடு

கமல் போட்ட ஒரே ஒரு டுவீட்: சிக்கலில் செந்தில் பாலாஜி

Published

on

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, மணல் அள்ளுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இது குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்து இருந்தார். அந்த டுவிட் செய்த தாக்கம் காரணமாக தற்போது அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த செந்தில்பாலாஜி, திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றவுடன் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கொள்ளலாம் என்றும், அதை எந்த் அதிகாரியாவது தடுத்தால் அந்த அதிகாரியை உடனே மாற்றுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

செந்தில் பாலாஜியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனத்தை கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சார மேடைகளிலும் செந்தில் பாலாஜியை கிரிமினல் என்று அவர் புகார் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் மணல் அள்ளுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version