தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர் பட்டியல்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனை முடிந்ததாக தகவல்!

Published

on

அதிமுக வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவர் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருதரப்பினரும் உடன்பாடு பேசியுள்ளதாகவும் இதனை அடுத்து விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியலில் தனது ஆதரவாளர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டதாகவும் இதனால் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் வேட்பாளர் அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்ட தாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இரு தரப்பினரும் கலந்து பேசி ஈபிஎஸ் தரப்பினருக்கு 60 சதவீதமும் ஓபிஎஸ் தரப்பினர்களுக்கு 40 சதவீதமும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று பேசி முடிக்கப்பட்டதாம்.

இதனை அடுத்து இரு தரப்பும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இன்று அல்லது நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக தனது கூட்டணி கட்சிகளை திறமையாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்களை முடித்துள்ள நிலையில் தற்போது உட்கட்சி விவகாரத்தில் சிறப்பாக பணியை முடித்து உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending

Exit mobile version