தமிழ்நாடு

உதயநிதியைப் பற்றி பச்சைப் பச்சையாக வசை… கைத்தட்டி ரசித்த அதிமுக வேட்பாளர்; சர்ச்சையாகும் சம்பவம்!!!

Published

on

அதிமுக சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடுபவர் என்.பி.நடராஜ். அம்பிளிக்கை ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் இவருக்கு ஆதரவாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுகவின் நடிகை விந்தியா முதல் பல முக்கியப் புள்ளிகள் வந்துப் பிரச்சாரம் செய்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரச்சாரம் செய்த இவருடன், ஒரு பேச்சாளரும் வந்திருந்தார். அந்தப் பேச்சாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சித்து வரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை, பச்சைப் பச்சையாக திட்டிப் பேசியுள்ளார்.

உதயநிதி, முதல் முறையாக சென்னையில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறங்குகிறார். அவர் தன் சொந்த தொகுதியில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ளாமல், திமுக வேட்பாளர்களை ஆதரித்துத் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரப் பயணம் சென்று வருகிறார்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் பேசிய அந்த சர்ச்சைக்குரிய பேச்சாளர், உதயநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை முதல் அனைத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் வசை பாடியுள்ளார். இதை அருகில் இருக்கும் அதிமுக வேட்பாளர் நடராஜ், ரசித்து கைத் தட்டிச் சிரிப்பது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திமுகவின் அதிக கொதிப்பில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version