தமிழ்நாடு

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு நிறைவு: எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன!

Published

on

இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதிமுக – பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது. இந்நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டதாக தமிழக பாஜக தலைவர் எல.முருகன் தெரிவித்துள்ளார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவுக்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் கிடைத்த நிலையில், நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தார். இந்த உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக – பாமக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. கூட்டணி உடன்படிக்கையின்படி, பாமக 23 தொகுதிகளில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் சென்னையில் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.

அதைப் போலவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகளோடு நேற்று அதிமுக தலைமை ஆலோசனை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் தான் பாஜகவுக்கு அதிமுக தரப்பில் எத்தனை தொகுதி ஒதுக்குவது என்பது முடிவு செய்யப்பட்டு உள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சித் தலைமைகளும் விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும், பேச்சுவார்த்தையில் திருப்தி இருந்ததாகவும் முருகன் கூறியுள்ளார். 

முன்னதாக பாமகவுக்கு, அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு இணையான தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி உள்ளதாம். இந்த இரு கட்சிகளை விட பாஜகவுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று தகவல் சொல்லப்படுகிறது. 

seithichurul

Trending

Exit mobile version