தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக நடத்தும் முதல் ஆர்ப்பாட்டம்: தேதி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் மே மாதம் எண்ணபட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்பதும், திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக ஆட்சி வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகி இருக்கும் நிலையில் அதிமுக முதல் முறையாக போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக அதிமுக நடத்தும் போராட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழர் நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு மெத்தனமாக இருப்பதால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

குறிப்பாக நீட் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும் அதற்கு எதிராக முழக்கங்களை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் இந்த போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version