தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் அவசர ஆலோசனை செய்யும் அதிமுக-திமுக!

Published

on

இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளும் இன்னும் எந்த பெரிய கட்சியுடனும் தொகுதி உடன்பாட்டை முடிக்கவில்லை. அதிமுக தரப்பில் பாமக மட்டும் 23 தொகுதிகளைப் பெற்று உள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் என ஒப்பந்தம் ஆகி உள்ளது

இன்னும் அதிமுக தரப்பில் பாஜக மற்றும் தேமுதிக பேச்சுவார்த்தையில் தான் உள்ளது. அதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை முடிக்கவில்லை.

இந்த நிலையில் தேர்தல் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து ஆலோசிக்க அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 9 மணிக்கு திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டமும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டமும் நடைபெறுகிறது. இன்று ஒரே நாளில் இரு பெரிய கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

 

Trending

Exit mobile version