தமிழ்நாடு

அதிமுகவும் பாஜகவும் கணவன் – மனைவி போல்: பாஜக பிரபலம் பேச்சு!

Published

on

அதிமுகவும் பாஜகவும் கணவன்-மனைவி போன்றது என்றும் மனைவி இரண்டு நாள் ஊருக்கு போனால் தான் கணவனுக்கு மனைவியின் அருமை தெரியும் என்பது போல பாஜக தனித்து நின்று போட்டியிட்டு வென்றால் தான் அதன் அருமை அதிமுகவுக்கு தெரியும் என்றும் பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன் தேர்தல் பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன், ’முன்னாள் அமைச்சர் உதயகுமார் பாஜகவை கடுமையான விமர்சனம் செய்தது குறித்து கூறிய போது உதயகுமாருக்கும் நமக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் உதய சூரியனுக்கும் நமக்கும் தான் பிரச்சனை என்றும் கூறினார்.

அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து தற்போது தனித்து போட்டியிட்டாலும் அதிமுகவும் பாஜகவும் கணவன்-மனைவி போன்றது என்றும் மனைவி இரண்டு நாள் ஊருக்கு போனால் தான் மனைவியின் அருமை கணவனுக்கு தெரியும் என்பது போல பாஜக தனித்து நின்று போட்டியிட்டு சில தொகுதிகளை வென்றால்தான் பாஜக யார் என்பது அதிமுக புரியும் என்று கூறினார்.

Trending

Exit mobile version