தமிழ்நாடு

அதிமுக, திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது? புதிய தகவல்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன,

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விருப்பமனு கொடுத்தவர்களிடம் இரு கட்சிகளும் நேர்காணலை நடத்தி உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல் தயாராகி வருவதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. இதில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தொகுதிகள் குறித்த விவரங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதன் தலைவர் ஸ்டாலின் இது குறித்த தகவலை அறிவித்துள்ளார்

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கிவிட்ட நிலையில் தமிழ்கத்தில் தேர்தல் களைகட்டி விட்டது என்று கூறலாம்.

Trending

Exit mobile version