தமிழ்நாடு

நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு: எல்.கே.சுதீஷ் ஃபேஸ்புக் பதிவின் பின்னணி என்ன?

Published

on

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த முறை அந்த கூட்டணியில் இருக்குமா? என்ற சந்தேகம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்தது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வந்த அதிமுக, தேமுதிகவை கண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று அதிமுக கறாராகச் சொல்லி விட்டதாகவும் இதனால் தேமுதிக அதிர்ச்சியில் இருப்பதாகவும் தெரிகிறது.

பாமகவைவிட குறைந்த தொகுதியை பெற்றால் நாளை கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்றும் அதனால் 12 தொகுதிக்கு ஒப்புக் கொள்ளக் கூடாது என்றும் தேமுதிக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் திமுகவின் கதவு எப்போதோ சாத்தப்பட்டு விட்டது என்பதும் வேறு ஆப்ஷன் எதுவும் இல்லாததால் அதிமுகவை தவிர தேமுதிகவுக்கு வேறு வழி இல்லை என்பதால் அதிமுக 12 தொகுதியில் கறாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் திடீரென எல்.கே.சுதீஷ் தனது ஃபேஸ்புக்கில், ‘நமது முதல்வர் விஜயகாந்த் என்றும் நமது சின்னம் முரசு என்றும் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த சலசலப்புக்கள் எல்லாம் அதிமுக எந்தவித பயமுமின்றி தேமுதிக இல்லை என்றாலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version