தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? பேச்சுவார்த்தை தீவிரம்!

Published

on

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களிடம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் கிஷன் ரெட்டி, சிடி ரவி உள்ளிட்டோர் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து பேசுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பேச்சுவார்த்தையில் பாஜக 38 லிருந்து 40 தொகுதி வரை பாஜக கேட்டதாகவும், அதிமுக 20 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை முடிவடைந்து தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரவிருப்பதாகவும், அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

பாஜக உடனான தொகுதி பங்கீடு முடித்தவுடன் பாமக உடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக இணைவது ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இன்று மாலை அல்லது நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 6 என்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்னும் இரண்டு நாட்களில் தொகுதி பங்கீடு பணியை முடித்துவிட்டு பிரச்சாரம் செல்ல தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version