தமிழ்நாடு

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு உடன்பாடு: எத்தனை தொகுதிகள்?

Published

on

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பாஜக 30 தொகுதிகளுக்கும் அதிகமாக கேட்டதாகவும், அதிமுக 15 முதல் 18 தொகுதிகள் வரை தர முன் வந்ததாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பாஜவுக்கு அதிமுக 20 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. அது மட்டுமன்றி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் பாஜக, அதிமுகவுக்கு ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

L Murugan - EPSஇது குறித்த ஒப்பந்தம் இரு கட்சிகளின் தலைவர்களிடையே கையெழுத்தாகியுள்ளதை அடுத்து அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தேமுதிக, தமாக உள்ளிட்ட ஒருசில கட்சிகளுடன் மட்டுமே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version