தமிழ்நாடு

பாஜக கேட்கும் தொகுதிகள் 8+4? : அதிர்ச்சியில் அதிமுக!

Published

on

அதிமுக பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட்டணி உறுதியாகிவிட்டது என்றே அரசியல் வட்டாரத்தில் உறுதியாக பேசப்படுகிறது. இதனையடுத்து அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் முரன்பாடு இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக ஒரு குழு அமைத்து தங்களுக்கு சாதகமான தொகுதிகள் என, கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய எட்டு தொகுதிகளை பட்டியலிட்டுள்ளனர். இதனை அதிமுகவிடம் அறிவுறுத்தியுள்ளது பாஜக. ஆனால் பாஜக கேட்டிருக்கும் சில தொகுதிகள் அதிமுக கோட்டை என்பதால் அதிமுகவில் முனுமுனுப்புகள் ஆரம்பித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சட்டமன்ற இடைத்தேர்தலில் 3 அல்லது 4 தொகுதிகள் பாஜகவுக்கு வேண்டும் என கேட்டிருக்கிறார்களாம். இது எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. நிலக்கோட்டை, சாத்தூர், திருப்போரூர் ஆகிய மூன்று தொகுதிகளையும் பாஜக கேட்டு வருகிறது. பாஜகவின் இந்த அனுகுமுறை அதிமுக தலைமையை அதிகமாகவே டென்ஷனாக்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending

Exit mobile version