தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா? அதிமுக முக்கிய ஆலோசனை!

Published

on

பாஜகவுடன் கூட்டணி தொடர்வதா இல்லையா என்பது குறித்து அதிமுக நிர்வாக குழு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்றும் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த பணிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில் இந்த கட்சிகளுடன் கூட்டணி தொடர்வதா? அல்லது கூட்டணியை முறித்துக் கொள்வதா? என்பது குறித்து ஆலோசிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இந்த ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னரே பாஜகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து முடிவு செய்து அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்தில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் அதிமுக – பாஜக கூட்டணி முடிந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்ததால் கூட்டணி தொடரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று அதிமுக தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version