தமிழ்நாடு

அதிமுகவுடன் பாஜக கூட்டணி: எஸ்வி சேகர் உறுதி!

Published

on

தமிழக அரசியலை தேர்தல் மேகம் சூழ்ந்துள்ளது எனலாம். விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என தேர்தலை மையமாக வைத்தே தமிழக அரசியல் தற்போது நகர்ந்து வருகிறது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் பாஜகவின் கூட்டணி இன்னமும் உறுதி செய்யப்படாமல் உள்ளது.

பாஜக பின்னால் இருந்து அதிமுகவை இயக்குவதாக பொதுவாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இறுதி நேரத்தல் பாஜகவும், அதிமுகவும் தேர்தலில் கூட்டணி வைக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்னமும் இந்த இரு கட்சிகளின் கூட்டணியில் சிக்கல் இருப்பதாகவே உள்ளது கள நிலவரம்.

இந்நிலையில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்வி சேகர் கருரூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாஜக மத்திய அரசுக்கான அனைத்து கடமைகளையும் சரியாக செய்து வருகிறது. அதேபோல அதிமுக மாநில அரசுகளுக்கு உண்டான அனைத்து கடமைகளையும் சரியாக செய்து வருகிறது. எனவே இந்த இரு அரசுகளும் நட்புடன் இருந்து வருகிறது. இந்த நட்பு கண்டிப்பாக கூட்டணியாக மாற வாய்ப்புள்ளது என்றார்.

seithichurul

Trending

Exit mobile version