தமிழ்நாடு

திடீரென சேலம் சென்ற ஈபிஎஸ்: பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ரத்தா?

Published

on

கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அதிமுக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிலையில் பாஜக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலம் சென்று உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து இன்று பேச்சுவார்த்தை நடக்காது என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாகவும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என பெரும்பாலான அதிமுக பிரமுகர்கள் கூறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து பாஜக தற்போது தனித்து விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அக்கட்சி ஒரு சில சிறிய கட்சிகளுடன் இணைந்து தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்த நிலையில் தற்போது அந்த கூட்டணி உடைந்து உள்ளதால் யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்? என்பது தேர்தல் முடிவில் தான் தெரியவரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version