Connect with us

தமிழ்நாடு

சன் டிவியில் அதிமுக விளம்பரம்; மாறன் சகோதரர்களை சாடிய திமுக எம்.பி!

Published

on

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. அதேபோல தங்களின் பரப்புரைகளை மேற்கொள்ள தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என எல்லாவற்றிலும் விளம்பரம் செய்து வருகின்றன கட்சிகள். அப்படி அதிமுக விளம்பரம் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமானதுதான் சன் குழுமம். அதன் முக்கிய சேனலான சன் டிவியில் இப்படியான விளம்பரம் ஒளிபரப்பானது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தர்மபுரியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் குரலெழுப்பியுள்ளார்.

அவர், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘சேற்றில்/ஆற்றில் கால். சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை. அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள்’ என்று பதிவிட்டு மாறன் சகோதரர்களை கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் அவர், ”எங்களுக்கு தொழில் தான் முதல். அது தான் முக்கியம். திமுகவிற்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் என்றும் இருக்காது. திமுக விடம் எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை, என்று வெளிப்பயடையாக அவர்கள் அறிவித்துவிட்டு இது போல் விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பட்டும்’ என்றும் கூறியுள்ளார்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!