தமிழ்நாடு

புஸ்வானமான ஒற்றைத் தலைமை கோரிக்கை: அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்!

Published

on

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என குரல் கொடுத்தார் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா. இதற்கு ஆதரவு குரல் எழும்ப அதிமுகவில் கலகம் தொடங்கியது. இந்த சூழலில் இந்த நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது அதிமுக தலைமைகள். இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி மற்றும் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டுமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்படவே இல்லை. அது குறித்த எந்த குரலும் எழும்பாததால் ஒற்றைத் தலைமை கோரிக்கை தற்போதைக்கு புஸ்வானமாகியுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானமும், அதிமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்து இரண்டாவது தீர்மானமும், பிரதமரை முன்மொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து மூன்றாவது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக துவங்கி மக்கள் மனங்களை வென்றெடுப்போம் என நான்காவது தீர்மானமும், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் பணியினைத் தொடர வேண்டும் என ஐந்தாவது தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரம் இன்று வெடிக்கவில்லை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version