இந்தியா

மாட்டுக்காக நடந்த மீட்டிங்.. போலீஸ் கொலையில் யோகி போட்ட ஆர்டரை பாருங்க!

Published

on

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்பவர்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில் நேற்று முதல்நாள் பசுக்காவலர்கள் பெரிய கலவரம் செய்தனர். இதற்காக நேற்று ஆதித்யநாத் வேகவேகமாக மீட்டிங் போட்டார். இதில் அந்த கலவரத்தை ஒடுக்கச்சென்ற போலீசார் அனைவரும் கலந்து கொண்டனர். அதேபோல் போலீஸ் உயரதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிங்களும் இதில் கலந்து கொண்டனர்.

ஆனால் இதில் பசு படுகொலை குறித்துதான் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பசுக்கொலையை செய்தது யார் என்று ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார். பசுக்கொலைக்கு பின் இருப்பவர்கள் யார் என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டார்.

அதோடு இதுகுறித்து சீக்கிரமாக அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடக்கும் பசுக்கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. என்ன நடந்தாலும் பசுக்கொலைகளை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version