Connect with us

சினிமா

ஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…

Published

on

ஆதித்ய வர்மா… வழக்கமான காதல்… வழக்கமான காதல் கதையா அல்லது இது ஏதும் ஸ்பெஷல் இருக்கிறதா என்றால் அதை தான் நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்…

மங்களூரு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார் ஆதித்ய வர்மா (துருவ் விக்ரம்)… அங்கு முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியாக சேர்கிறார் மீரா… மீரா ஷெட்டி (பணிதா சாந்து)… ஆமா… அப்படித்தான் அவங்களைக் கூப்பிடணும்… அவங்களும் அப்படித்தான் சொல்லுவாங்க… மீராவை பார்த்ததும் அதித்யாவுக்கு காதல் வருகிறது. முதல் நாளே முத்தமிடுகிறான். அவளும் ஏற்றுக்கொள்கிறாள். அடுத்தநாளில் இருந்து இருவரும் திகட்ட திகட்ட காதலிக்கிறார்கள்… இந்த திகட்டாத காதல் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் ஆதித்ய வர்மாவின் மீதிக் கதை… (கதை புதுசு மாதிரி இருக்குல…)

ஏற்கனவே பாலாவால் வர்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, படம் முடிவடைந்த நிலையில், அதில் திருப்தி இல்லாததால் அந்தப் படம் கைவிடப்பட்டது. பிறகு, அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் வாங்காவிடம் துணை இயக்குனராகப் பணியாற்றிய கிரீஷாயாவை இயக்குநராக வைத்து மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது ஆதித்ய வர்மா…

2017ம் ஆண்டு அர்ஜூன் ரெட்டியாக தெலுங்குவில் வெளியாகி பெரும்பாலும் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் தற்போது தமிழில் அப்படியே வெளியாகி இருக்கிறது. அதில் அர்ஜூன் இதய அறுவைச்சிகிச்சை மருத்துவர்… இதில் ஆதித்யா எழும்பு முறிவு மருத்துவர்… இந்த மருவை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை…

பார்த்ததும் காதல்… விரும்பம் இன்றி பெண்ணை நெருங்குவது… அவரது உணர்வுகள், உணர்ச்சிகள் என எதற்கும் இடம் கொடுக்காமல் தன்னுடைய உணர்வுகள், உணர்ச்சிகள் என்று இருப்பது, முட்டாள் தனமான கோவம், எதையும் நின்று நிதானமாக யோசிக்காத ஒருவன், எப்போதும் குடி, பெண்கள் தொடர்பு, போதை பொருட்கள் என எடுத்துக்கொள்பவன். ஆனால், நன்றாக படிப்பவன், அழகாக இருக்கிறான், நிறைய பணம் வைத்திருப்பவன். இப்படி ஒரு கதாபாத்திரம் எப்படி சாத்தியம். அதை ஒரு பெண் ஏற்றுக்கொண்டு முழுவதும் அவனை சார்ந்தே இருப்பதாக அடி வாங்கிக் கொண்டு… முத்தம் மட்டும் கொடுத்துக்கொண்டு, தன்னுடைய சூழலை விளக்க ஆறு மணி நேரம் மட்டுமே கொடுக்கும் ஒருவனுடைய குழந்தையை திருமணத்திற்கு முன்னரே சுமக்கும் ஒரு பெண்ணும் எப்படி சாத்தியம் என்ற மிகப்பெரிய கேள்வி அர்ஜூன் ரெட்டி படத்தைப் பற்றி என்னிடம் யார் எப்போது பேசினாலும் எனக்கு இருக்கும்… அதே கேள்வி இந்தப் படத்தைப் பார்க்கும்போது வந்தது. அதே கதை தானே இதுவும்…

ஒருவேளை 20, 21ம் நூற்றாண்டுகளின் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இந்தக் கேள்விக்கு விடை தெரியுமோ என்னமோ… வயது ஆகிவிட்டது.

படமாக முதல் பாதி ஓரளவு பொறுத்துக்கொண்டு பார்க்கலாம். ஆனால், இரண்டாம் பாதி மிகப்பெரிய இழுவை… முழுவதும் மது பாட்டில்கள்தான். சிரமங்களுக்கு இடையேதான் பார்க்க வேண்டி இருக்கிறது. சிலர் இடையிலே எழுந்தும் போனார்கள்… பாவம் 70களின் குழந்தைகளாக இருப்பார்கள் போல… நான் 80ன் குழந்தை என்பதால் கொஞ்சம் பொறுத்துகொள்ள முடிந்ததோ இல்லையோ…

துருவ் விக்ரம்… துரு… துரு… என இருக்கிறார்… சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக ரசிகைகளுக்கு ஒரு நல்ல வரவுதான். நடிப்பிலும் உண்மையில் நன்றாக நடித்திருக்கிறார். குரல், நடை, உடல் பாவனையில் சில இடங்களில் விக்ரமை ஞாபகம் படுத்துகிறார்.

பணிதா சாந்து வடக்கே இருந்து மற்றொரு அழகான இறக்குமதி… வருகிறார்… அழுகிறார்… முத்தம் கொடுக்கிறார்… கற்பமாகிறார்… கடைசியில்… (நோ அது சஸ்பென்ஸ்)… 20 வருடங்கள் கழித்து கடலோரக் கவிதைகள் ராஜா மீண்டும் சினிமாவில் எண்ட்ரி ஆகியிருக்கிறார்…

ஸ்மைல் சேட்டையின் அன்பு தாசன்… அதித்யாவின் நண்பராக வருகிறார்… அவரது சில கமெண்ட்ஸ் சிரிப்பை வரவழைக்கிறது. நன்றாகவும் நடித்துள்ளார். வேறு யாரையும் பெரிதாக சொல்லிக்கொள்ள முடியவில்லை…

பாடல்களைவிட பின்னணி இசை நன்றாகவே இருக்கிறது. அதுவும் நாய் சத்தமாக குறைந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு பின்னணி  இசை நாயகனுக்கு கொடுத்திருக்கிறார் ரத்தான்… கேட்க நன்றாக இருந்தது…

நிறைய ஆங்கில வசனங்கள்… நலன் குமாரசாமி வேறு எழுதியிருக்கிறார். அதிகமான பண வாடை… எதார்த்தத்திற்கு சற்றும் பொறுந்தாத குடும்ப வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்க்கை… அங்கும் ஜாதிய வேறுபாடு… என இருக்கும் இந்தக் கதை வேண்டுமானால் இதே வாழ்க்கை வாழும் .1% மக்களுக்குக்கும் .1% 20களின் குழந்தைகளுக்கும் பிடிக்கலாம்… மற்ற 99.98% மக்களுக்கு… கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும்…

எதிர்காலம் இருக்கிறது… துருவ்… காத்திருக்கிறோம் இன்னும் கொண்டாட…

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!