சினிமா

டிரெண்டிங் பாட்டுக்கு ஷங்கர் மகள் கொடுத்த போஸ் – வைரல் வீடியோ…

Published

on

தமிழில் ஜென்டில்மேன் முதல் 2.0 வரை பல பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அதோடு, அவரின் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 பாதியில் நிற்கிறது. எனவே, அப்படமும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேண்டஸி கலந்த இவரின் திரைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தற்போது இவரின் மகள் அதிதியும் தற்போது சினிமாவில் நடிக்க வந்துள்ளார். கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவர் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனியில் துவங்கியது. 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்து தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

இந்நிலையில், டிரெண்டிங்கான பாடல் ஒன்றுக்கு தலை முடியை ஆட்டி ஆட்டி போஸ் கொடுத்து அந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘செம க்யூட்’ என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

 

 

 

Trending

Exit mobile version