சினிமா செய்திகள்
டாக்டர் பட்டம் பெற்றார் இயக்குனர் ஷங்கரின் மகள்: வைரல் புகைப்படங்கள்!
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் டாக்டர் பட்டம் பெற்றதையடுத்து பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் என்பதும் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் என்பதும் அவர் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பு படித்து முடித்துள்ள நிலையில் அவருக்கு நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிதி ஷங்கருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். இது குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அதிதி ஷங்கர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’விருமன்’ என்ற திரைப்படத்தில் அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகமாகி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள அதிதி ஷங்கர், டாக்டர் தொழிலுக்கு செல்வாரா? அல்லது தொடர்ந்து நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Here’s to all the fun memories, late nights and mugs of coffee that got me here ✨ Officially Dr.Aditi Shankar #graduationday #endsandbeginnings pic.twitter.com/bws6Wlcy1O
— Aditi Shankar (@AditiShankarofl) December 11, 2021