சினிமா

அஜித் படத்தில் இணைந்த ஆதிக் ரவிச்சந்திரன்!

Published

on

த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் 59வது படமான பிங்க் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படம் மாபெரும் வெற்றியடைந்தது. அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய போனி கபூர் முடிவு செய்தார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள பிங்க் ரீமேக் படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்கிறார்.

டாப்ஸி வேடத்தில் யார் நடிக்கப்போவது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த படத்தில், மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் தான் முக்கிய கதாபாத்திரங்கள். அந்த மூன்றில் ஒரு ஆணாக ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார்.

மேலும், தந்தி டிவியில் இருந்து வெளியேறிய ரங்கராஜ் பாண்டே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version