இந்தியா

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக மாறிய அதானி: பின்னுக்கு தள்ளப்பட்ட அம்பானி!

Published

on

இதுவரை ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு தொழிலதிபர் அதானி முதலிடத்தை பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய தொழிலதிபர் அதானி 9050 கோடி டாலர் சொத்துக்களுடன் ஆசியாவின் முதல் பணக்காரர் என பெருமை பெற்றுள்ளார். அது மட்டுமன்றி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பத்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 8 ஆயிரத்து 920 கோடி டாலர் சொத்துடன் அம்பானி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடந்த பல ஆண்டுகளாக ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி தற்போது முதல் முறையாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக பணக்காரர் பட்டியலில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மாஸ்க் 23 ஆயிரத்து 630 கோடி டாலர் சொத்துக்களுடன் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version