இந்தியா

அமேசான் அதிபரை மிஞ்சிய அதானி: 2.5 மாதங்களில் 1.17 லட்சம் கோடி வருமானம்!

Published

on

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமேசான் அதிபரையே இந்தியாவின் தொழிலதிபர் அதானி வருமானத்தில் முந்தி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவருக்கும் அதிக சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப் பெஜோஸ், டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் ஆகியோரையும் மிஞ்சி இந்த ஆண்டில் உலகிலேயே அதிக வருமானம் பெற்ற தொழிலதிபர் அதானி தான் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தொழிலதிபர் அதானியின் சொத்து மதிப்பு கடந்த 2.5 மாதங்களில் மட்டும் சுமார் 1.17 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாகவும் மொத்தம் இவருடைய சொத்து மதிப்பு 3 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயை எட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. உலகின் பெரும் பணக்காரராக மாறி உள்ள அதானியை பார்த்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே ஆச்சரியத் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் பங்குசந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளது என்பதும், அமேசான் மற்றும் எலான் மாஸ்ல் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதும், இதன் காரணமாகத்தான் ஜெப் போசஸ், எலான் மாஸ்க்கை விட அதானியின் வருமானம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version